மீண்டும் ரகசிய போலீஸாக நடிக்கும் சரத்குமார்

ஒரு காலத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சரத்குமார் பிறகு அரசியலில் தீவிரமாக செயல்பட்டதால்(..?) பழைய மாதிரி முழுமையாக சினிமாவில் நடிக்க முடியவில்லை. இருந்தாலும் கிடைத்த கேப்பிலெல்லாம் ‘சண்ட மாருதம்’ போன்ற படங்களில் நடித்து நம்மை மிரட்டுவார். தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கப் போகிறார்.

அந்தப் படம் சரத்குமார் நடிப்பில் ஏற்கனவே வெளிவந்து சுமாரான வெற்றியடைந்த ‘சென்னையில் ஒருநாள்’ படத்தின் இரண்டாம் பாகமாம். ஆனால் ‘சென்னையில் ஒருநாள்’ படத்தின் தொடர்ச்சியாக இப்படம் இருக்காதாம். (அப்புறம் எதுக்கு இந்த டைட்டில்). பிரபல க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் ஒரு க்ரைம் த்ரில்லர் நாவலை தழுவி இப்படம் உருவாகவிருக்கிறது. இப்படத்தை ஜேபிஆர் இயக்குகிறார். சரத்குமாருடன் முனீஸ்காந்தும் இனைந்து நடிக்கிறார்.

You might also like More from author