சொன்ன தேதியில் படம் வருமா கவலையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

ஆந்திரா சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் ‘ஸ்பைடர்’ படம் வரும் ஜூன் 23ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பும் இந்த மாதத்துடன் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனக்கு திருப்தியில்லாத காட்சிகளை மீண்டும் ரீ சூட் செய்ய வேண்டும் என்று முருகதாஸ் சொல்லிவிட்டதால் சரி என்று ஒப்புக் கொண்டுள்ளனர் மகேஷ்பாபுவும், தயாரிப்பாளரும். மே மாதம் முழுக்க ஷூட்டிங் நடக்கும் என்று தகவல்கள் சொல்கின்றன.

இதனால் சொன்ன தேதியிலிருந்து தள்ளிப் போகுமோ என்று மகேஷ் பாபு ரசிகர்கள் கவலையடைய, முருகதாஸ் ‘’ரசிகர்கள் யாரும் சோகமாக வேண்டாம். என்னதான் மே மாதம் வரை ஷூட்டிங் நடத்தினாலும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் ஒரே சமயத்தில் நடந்து வருவதால் ஸ்பைடர் சொன்ன தேதியில் நிச்சயம் ரிலீசாகும்’’ என்று உறுதி கூறியுள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: