விக்ரம் ரசிகர்களை குஷிப்படுத்திய கெளதம் மேனன்

‘காக்க காக்க’ படத்திலேயே இணைந்திருக்க வேண்டிய கூட்டணியான விக்ரம் கௌதம் மேனன் இருவரும் தற்போது இணைந்திருக்கும் படம்தான் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தில் இன்டர்போல் ஆபிசராக நடிக்கும் விக்ரமை வைத்து அமெரிக்காவில் முதல் கட்டப் படப்பிடிப்பை நடத்தி முடித்தார் கௌதம் மேனன். அந்த காட்சிகளை டீசராக வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார்.

ஆனால் திடீரென்று விக்ரம் ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடிக்க வந்துவிட்டதால் ‘துருவ நட்சத்திரம்’ படம் என்னவானது என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. படம் ஒருவேளை ட்ராப்பா எனவும் விக்ரம் ரசிகர்கள் கவலையில் ஆழந்தனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஆச்சரியம் கொடுக்கும் வகையில் விக்ரமின் பிறந்த நாளான ஏப்ரல் 17 அன்று ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது டீசரை வெளியிட்டு அவர்களை குஷிப்படுத்தியுள்ளார் கௌதம் மேனன். இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

You might also like More from author

%d bloggers like this: