வைரமுத்து சீனு ராமசாமி உரசலை எதிர்பார்த்து ஏமாந்தவர்கள்

பொதுவாக சில விழாக்களில் பேசும் முக்கிய விருந்தினர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் எல்லோருக்கும் நன்றி கூறுவதும், ஆனால் விழாவின் நாயகனையே மறந்துவிடுவதும் அவ்வப்போது கவனக் குறைவால் நடக்கும் சகஜமான நிகழ்வுதான். ஆனால் சம்பந்தப்பட்டவர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாகக் கடந்துவிடுவார்.

கவிப்பேரரசு வைரமுத்து ஆறாவது முறையாக சீனு ராமசாமியின் ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தின் பாடலுக்கு தேசிய விருது வாங்கியபோது சீனு ராமசாமியை கொண்டாடினார். தற்போது சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளிவந்த ‘தர்மதுரை’ படப் பாடலுக்கு ஏழாவது முறையாக தேசிய விருதுப் பெற்றிருக்கும் வைரமுத்து சீனு ராமசாமியை மறந்துவிட்டு, மற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இதனால் லேசாக வருத்தப்பட்டாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை சீனு ராமசாமி. ஆனால் வைரமுத்து சீனு ராமசாமி கூட்டணி உடைய வேண்டும் எதிர்பார்த்திருந்த அந்த சிலருக்கு மட்டும் பெருத்த ஏமாற்றம்.

You might also like More from author

%d bloggers like this: