‘’ஜெயம் ரவி எனக்கு பொறுமையாக சொல்லிக் கொடுத்தார்’’ – நிவேதா பெத்துராஜ்

அறிமுகப் படமான ‘ஒருநாள் கூத்து’வில் நன்றாக நடித்ததற்காக அனைவராலும் பாராட்டப்பட்ட நிவேதா பெத்துராஜிற்கு வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன. உதயநிதி ஸ்டாலினுடன் ‘பொதுவாக எம் மனசுத் தங்கம்’ படத்திலும், ஜெயம் ரவியுடன் ‘டிக் டிக் டிக்’ படத்திலும் நடித்து வருகிறார். அவர் ஜெயம் ரவியுடன் நடித்ததனால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்.

‘’டிக் டிக் டிக் படத்தில் வாய்ப்பு கிடைத்ததுமே ஜெயம் ரவியுடன் எப்படி நடிக்கப் போகிறோம் என்ற பயம் எனக்கு ஏற்பட்டது. அவர் பெரிய நடிகர். நிறைய டேக் வாங்கினால் கோபித்துக் கொள்வாரோ என்றெல்லாம் பயந்தேன். ஆனால் அவரோ அதற்கு நேர்மாறானவர். துளிகூட பந்தா இல்லாதவர். நான் நடிப்பில் தவறு செய்யும்போதெல்லாம் எனக்கு பொறுமையாக சொல்லிக் கொடுத்து, என்னை ஊக்குவிப்பார். இதனால் நான் அவரிடம் வைத்திருந்த மதிப்பும், மரியாதையும் பலமடங்கு அதிகமாகிவிட்டது’’ என்று புளங்காகிதம் அடைகிறார் நிவேதா பெத்துராஜ்.

You might also like More from author

%d bloggers like this: