டி.ஆர் மற்றும் விஜய்சேதுபதியும் இணைந்து பட்டைய கிளப்பும் ”கவன்” பாடல்.

விஜய் சேதுபதி,டி.ராஜேந்தர் நடித்துள்ள ’கவன்’ திரைப்படத்தில் இடம்பெறும் “ஹாப்பி நியூ இயர்” பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ’கவன்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி,மடோனா செபாஸ்டியன்,டி.ராஜேந்தர்,விக்ராந்த்,பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.நீண்ட இடைவேளைக்கு பிறகு டி.ராஜேந்தர் நடித்துள்ள படம் என்பதால்,தமிழ் ரசிகர்களிடையே கவன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் விரைவில் வரவுள்ள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு,கவன் படத்தில் இடம்பெறும் ”ஹாப்பி நியூ இயர்” என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலை ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பில் டி.ராஜேந்தரே பாடியுள்ளார்.துள்ளலான இசையில்,டி.ஆரின் பட்டைய கிளப்பும் குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் வீடியோ உங்களுக்காக..!

 

You might also like More from author