எஸ்.ஜே.சூர்யா கெளதம் மேனன் செல்வராகவனுடன் மோதும் அட்லீ

‘ராஜா ராணி’ என்ற காதல் படத்தை இயக்கிய அட்லீ அந்த படத்தின் மிகப் பெரிய வெற்றியால் முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார். இரண்டாவது படத்திலேயே மாஸ் ஹீரோவான விஜயின் கால்ஷீட்டை பெற்று ‘தெறி’ படத்தை இயக்கி, அதனையும் வெற்றிப் படமாக்கினார். மூன்றாவது படத்திலும் விஜயை இயக்கி வருகிறார். இந்நிலையில் அட்லீ ஒரு படத்தைத் தயாரித்தும் வந்தார்.

அந்தப் படத்தின் பெயர் ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’. ஹாரர் காமெடியாக உருவான இப்படத்தை ஐசக் எனும் புதியவர் இயக்கியுள்ளார். ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் இப்படத்தை மே மாதம் 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளார் அட்லீ. கிட்டத்தட்ட அதே தேதியில் செல்வராகவனின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எனும் ஹாரர் படமும் ரிலீஸாகிறது. இப்படத்தை இயக்குனர் கெளதம் மேனன் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like More from author

%d bloggers like this: