அறிமுக இயக்குனருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த எம்.எஸ்.பாஸ்கர்

டப்பிங் ஆர்டிஸ்டாக சினிமாவில் நுழைந்து, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்றும் காமெடி சீரியலில் பட்டாபியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் எம்.எஸ் பாஸ்கர். காலப்போக்கில் சினிமாவிலும் காமெடி கேரக்டர்களிலும், குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.

இந்நிலையில் ‘எட்டு தோட்டாக்கள்’ படத்தில் மனித நேயமிக்க வில்லன் வேடத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்திருக்கிறார். பாஸ்கரின் இந்த மிரட்டலான நடிப்பைப் பார்த்த  திரையுலகினர் பலரும் அவரை பாராட்டு மழையில் நனைய வைத்து வருகின்றனர். நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாஸ்கருக்கு இந்த வருடம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் என்றும் கட்டியம் கூறுகின்றனர்.

இதனால் உற்சாகமடைந்த பாஸ்கர் இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷை தன் வீட்டிற்கே வரவழைத்து தங்கச் சங்கிலி ஒன்றை பரிசளித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்

You might also like More from author

%d bloggers like this: