‘செஞ்சிட்டாளே என் காதல’ – விமர்சனம்

என்பது கால கட்ட சினிமாக்களில் ஹீரோ ஹீரோயினை காதலித்து ஏமாற்றும் கதைகளே நிறைய வந்தன. அந்த காலகட்ட உண்மை நிலவரம் அப்படித்தான் இருந்தன. ஆனால் காலம் மாறிப் போச்சு. இந்த காலத்துல அப்படியே உல்டாவாகத்தான் நடக்குது. இக்காலத்தில் பெண்கள் தன் காதலன் தனக்கு ஒத்து வரவில்லைஎன்றாலோ, அல்லது அவனைவிட பெட்டராக வேறு ஒருத்தன கிடைத்தாலோ அவனை காதலன் போஸ்டிங்கிலிருந்து கழட்டிவிடுவது பெரும்பாலும் நடக்கிறது. அப்படிப்பட்ட பெண் ஒருத்தி எப்படி தன் அன்பான காதலனை சுயநலத்திற்காக கழட்டிவிடுகிறாள் என்பதை விவரமாகவே அலசுகிறது ‘செஞ்சிட்டாளே என் காதல’ படம்.

படத்தின் முதல் காட்சியே ஹீரோ தூக்கு மாட்டி இறந்துவிட்டானோ என்ற பதைபதைப்புடன் துவங்குகிறது. ஆனால் அவன் அப்படியெதுவும் செய்யவில்லை. அப்பாவின் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு போய்விட்டான். யாரை கொல்வதற்கோ என அவனது அம்மாவும், தங்கையும் தேடிக் கொண்டிருக்க, ஃப்ளேஷ்பேக்கில் ஹீரோ ஹீரோயினை எப்படி விதவிதமாக பல டெக்னிக்குகள் செய்து காதலிக்க வைக்கிறார் என்பது காட்டப்படுகிறது. ஒருவழியா நம்ம ஹீரோ தானும் சாகாமல், மற்ற யாரையும் சாகடிக்காமலும் திரும்பி வந்துடுறாரு. சரி அப்போ இந்த ஐந்து நாட்கள் எங்கே போனான். எதற்கு துப்பாக்கியைக் கொண்டு போனான் என அம்மா தன் விசாரணையின் மூலம் தெரிந்து கொள்ள முயல மீண்டும் ஃப்ளேஷ்பேக். இதில் ஹீரோயினுக்கும், ஹீரோவுக்கும் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகளும், ஹீரோவைவிட பெட்டராக இன்னொரு பையன் கிடைத்தவுடன் ஹீரோயின் ப்ளேன் செய்து எப்படி ஹீரோவைக் கழட்டிவிடுகிறாள் என்றும் காட்டப்படுகிறது. ஃப்ளேஷ்பேக் முடிந்தவுடன் ஹீரோயின் வீட்டாரே ஹீரோ குடும்பத்துடன் வந்து மாப்பிள்ளை கேட்க, ஹீரோ அப்போது எடுக்கும் நெத்தியடி க்ளைமாக்ஸ்தான் மீதி.

ஹீரோவாகவும், இயக்குனராகவும் முதல் படத்திலேயே இரண்டு அவதாரம் எடுத்திருக்கும் எழில் துரை இரண்டிலுமே ஜெயித்திருக்கிறார். படம் ஆரம்பக் காட்சிகளில் நம்மை நெளியவிட்டாலும் தற்போதைய யூத்துக்களின் அட்ராசிட்டிகளை அள்ளித் தெளித்திருக்கும் திரைக்கதையால் நம்மை ஈர்க்கிறார். பல நீண்ட இழுவையான சில காட்சிகளை மட்டும் குறைத்திருந்து திரைக்கதையில் இன்னும் மெனக்கெட்டிருந்தால் ‘சிவா மனசுல சக்தி’, ‘அட்டக்கத்தி’ போன்று செம படமாக வந்திருக்கும். இருந்தும் திருப்தியான படமாவே இருக்கிறது.

எழில் துரையின் நடிப்பு பாக்கப் பாக்க நமக்கு பிடிக்கிறது. எங்கேயும் முதல் படத்திற்கேயுரிய பயமோ, பதட்டமோ, பிசிறோ இல்லாமல் அசால்ட்டான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். வாழ்த்துகள்

ஹீரோயின் மதுமிலா. இந்தக் கால ஜீன்ஸ் யுவதியை நம்முன் நிறுத்துகிறார். அழகிலும் சரி, நடிப்பிலும் சரி ஜம்மென்று இருக்கிறார்.

அர்ஜூனன், மைம் கோபி, கயல்வின்சென்ட், ‘மெட்ராஸ்அம்மா ரமா, தங்கை நித்யாவாக திவ்யா,  ஒன்சைட் கிக்கான காதலியாக அபிநயா என எல்லோருமே சுவாரஸியப்படுத்துகிறார்கள்.

ராஜ் பரத்தின் இசையில் பாடல்கள் ஹிட் ரகம் என்றாலும், பின்னணி இசையில் நம்மை படுத்துகிறார். கொஞ்சம் இரைச்சலைக் குறைத்திருக்கலாம்.

மணிஷின் கேமராவின் ஒவ்வொரு ஃபிரேமிலும் இளமை வழிகிறது.

எடிட்டர் லாரன்ஸ் கிஷோரின் நறுக்கென்ற கட்டிங் திரைக்கதை ஓட்டைகளை அடைத்து படத்தை மேலும் விருவிருபாக்குகிறது.

மொத்தத்தில்

‘செஞ்சிட்டாளே என் காதல’ – என்ஜாய் பண்ணலாம்

You might also like More from author

%d bloggers like this: