எதிபார்ப்பைக் கிளப்பும் ‘எய்தவன்’ ரிலீஸுக்கு ரெடி


டிஜிட்டல் வரவால் கோடம்பாக்கமே குப்பைக் கிடங்காக மாறியதால் சினிமா ரசிகர்களும், ஆர்வலர்களும் சோர்ந்து போயிருந்த நேரத்தில் தமிழ் சினிமாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டராக உயிர் கொடுக்கும் சில படங்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன. துருவங்கள் பதினாறு, குற்றம் 23, மாநகரம், கடுகு என்ற நல்ல படங்கள் வரிசையில் தற்போது இன்னொரு படமும் இணையப் போகிறது.

வெற்றிப் படங்களான ‘’துருவங்கள் பதினாறு’, ‘கடுகு’ படங்களை வெளியிட்ட சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பாக இந்த வாரம் வெளியாகவிருக்கும் ‘8 தோட்டாக்கள்’ படமும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக இந்நிறுவனம் Friends Festivel Films நிறுவனம் சார்பாக சுதாகரன் தயாரிப்பில் ‘மெட்ராஸ்’, கபாலி’, அதே கண்கள்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கலையரசன் ஹீரோவாகவும் ‘பிச்சைக்காரன்’ நாயகி சாட்னா
 டைட்டஸ் ஹீரோயினாகவும் நடித்திருக்கும் ‘எய்தவன்’ படத்தை ரிலீஸ் செய்கிறது. 
தொடர்ந்து நல்ல தரமான படங்களை வெளியிட்டு வரும் இந்நிறுவனம், எய்தவன்’ படத்தை பார்த்த கணமே வெளியிட முடிவு செய்த்ததால் இதுவும் நிச்சயம் ஒரு தரமான படமாக இருக்கும் என இப்போதே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘எய்தவன்’ மே 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

You might also like More from author

%d bloggers like this: