‘சிங்கம் 3’ திரை விமர்சனம் சினிமா விமர்சனம்

921

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ​ஏற்படுத்தியுள்ள ‘சிங்கம் 3’ திரைப்படம் சர்வதேச அளவில் இந்திய காவல்துறையை பெருமைப்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது.

திரைப்படம் துவங்கி 30 வது நிமிடத்தில் ஆரம்பிக்கும் துரைசிங்கத்தின் வேட்டையில் திரையரங்கங்கள் அதிர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கம், சிங்கம் 2 வரிசையில் இன்று திரைக்கு வந்துள்ள ‘சிங்கம் 3’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. பலமுறை படத்தில் வெளியீடு தள்ளிப்போனாலும், வசூலில் பட்டையைக் கிளப்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எந்த காட்சியும் சலிப்பு ஏற்படாமல் நகர்கிறது. மாஸ் போலீஸாக சூர்யா முதல் பாதி முழுவதுமே ஜொலிக்கிறார். ஒருநாள் போலீஸ் ஆக்ஷனும் அவை படமாக்கப்பட்ட விதமும் பக்கா. “பேசிட்டிருக்கோம்ல பொம்பள மேல கை வெக்கிற, தப்பில்ல”ன்னு சூர்யா பஞ்ச் பேசும்போது தியேட்டரே திருவிழா ஆகிறது. ஆகமொத்தம் இரண்டாம் பாதியை பார்பதற்கான ஆவலை முதல் பாதி படுஜோராக ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ‘சிங்கம் 3’ ​ இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *