மருத்துவமனையிலேயே இருக்கும் கஜோல்!!! விஐபி2 படப்பிடிப்பு பாதிப்பா?

308

வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதில் இவருக்கு ஜோடியாக அமலா பால், கஜோல் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, விவேக் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா இயக்கி வருகிறார்.

கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது கஜோல் மருத்துவமனையிலேயே இருந்து வருகிறார். கஜோலின் தாய் மற்றும் மாமியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கஜோலின் மாமியாரான வீணா உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

 இவரைத் தொடர்ந்து கஜோலின் தாய் தனுஜாவும் சர்க்கரை அளவு பிரச்சனை காரணமாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவரையும் ஒரே வார்டில் வைத்து கஜோல் பார்த்து வருகிறாராம். கஜோலின் கணவரான அஜய் தேவ்கன் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று தாயை பார்த்துக்கொள்கிறாராம்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *