அதே கண்கள் திரைவிமர்சனம்!

295
பீட்சா ரெஸ்டாரண்ட் நடத்தி வரும் கண் பார்வை இல்லாத ஒரு இளைஞன். வாழ்க்கையில் நம்பிக்கை துணையாய் வரும் பெண் மூலம் இவன் எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறான். அந்த பிரச்சனையிலிருந்து எப்படி வெளியே வருகிறான் என்பதுதான் படத்தின் கதை.
அவரை சஷ்விதா தினமும் யதார்த்தமாக சந்திக்க ஒரு கட்டத்தில் காதலாக மாறுகின்றது, இதை தொடர்ந்து சஷ்விதா குடும்பம் பெரும் பணக்கஷ்டத்தில் இருக்க, அதற்கு கலையரசன் உதவுவதாக வாக்கு கொடுக்கின்றார். அதன்பின் கலையரசனுக்கு விபத்து நடந்து போன பார்வை மீண்டும் திரும்பி வந்துவிடுகிறது. தன்னை காதலிப்பதாக கூறிய பெண் தேடி அலைகிறார். ஆனால் அவளை தேடி கண்டுபிடிக்க முடியாமல் போகிறது.
அப்படி தேடி அலையும்போது பல அதிர்ச்சி தகவல்கள் கலையரசனுக்கு கிடைக்கிறது. இடியாப்ப சிக்கலில் இருக்கும் அந்த மர்மம் ஒவ்வொன்றாக கலையரசன் தேடி தேடி அவிழ்த்து வருகிறார். அப்போது நடக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர்தான் படத்தின் க்ளைமேக்ஸ்.
சோலோ ஹிரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கலையரசன் அதிகமாக மெனக்கெடுவது நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் இந்த படத்தில் அவரையே மிஞ்சி அனைவரின் நெஞ்சில் இடம் பிடித்துவிடுகிறார் சஷ்விதா. ஜெனனிக்கு பெரிய வேலை இல்லை. தெகிடி சாயலில் படம் இருப்பதால் இந்த படத்துக்கு தெகிடி 2 என்றே தலைப்பை வைத்திருக்கலாம். தேவையில்லாம ஒரு நல்ல டைட்டிலை இந்த படத்துக்கு வச்சு வேஸ்ட் செஞ்சிட்டாங்க…
முட்டாள் போலீஸ் அதிகாரியாக பாலசரவணன்… திரைக்கதையில் தொய்வு வரும்போதெல்லாம் அவரின் அசால்ட் டைமிங் காமெடி தூக்கி நிறுத்திவிடுகிறது.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் சுமார்தான் ஆனால் பின்னணி இசை மிரட்டியிருக்கிறார், முதல் பாதி கொஞ்சம் சொதப்பல் இருந்தாலும் படத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்வது படத்திற்கு பலம்தான். படத்தின் பெரிய மைனஸ் என்று சொன்னால் அது வில்லன் யார் என்பதை சீக்கிரமே ரிவீல் செய்ததுதான் என்று கூறலாம்.
இயக்கம் ரோகில் வெங்கடேசன் முதல் படத்தில் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார்.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *