பைரவா திரைவிமர்சனம்

1514

பைரவா படத்தை பார்த்தோம்மானால் இளையதளபதியை வைத்துக் கொண்டு திரையில் நமக்கு பாடம் எடுத்திருக்கிறார் இயக்குனர் பரதன். கல்வி என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் நடத்தும் அக்கப்போறைதான் இந்த படத்திலும் கூறியிருக்கிறார் இயக்குனர்.

நம்ப தளபதியோட ரோல் என்னனா சென்னையில் தனியார் வங்கியில் லோன் கலெக்‌ஷன் டிபார்ட்மெண்டில் வேலை செய்கிறார். வங்கியில் லோன் வாங்கிட்டு டிமிக்கி கொடுப்பவர்களை நொங்கெடுத்து பணத்தை வாங்கும் வேலை விஜய்.

இதற்கிடையில் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வரும் கீர்த்தி சுரேஷ் மீது காதல் வயப்படுகிறார் விஜய். அவரிடம் காதல் சொல்ல போகும்போது கீர்த்தி சுரேஷின் நண்பனை ரவுடிகள் கத்தியால் வெட்டி கீர்த்தி சுரேஷை கிளம்புமாறு அந்த ரவுடிகள் கூறுகிறார்கள்.

அதன்பின் கோயம்பேடு மார்க்கெட்டில் இன்னொரு கும்பல் வெட்ட வருகிறது. அவர்களும் கீர்த்தி சுரேஷை எதுவும் செய்யாமல் ஓடிவிடுகிறார்கள். இதனையெல்லாம் பார்க்கும் விஜய்க்கு ஒன்றும் புரியாமல் குழம்புகிறார். தன்னை தெளிவுபடுத்திக் கொள்ள கீர்த்தி சுரேஷிடம் என்ன நடக்கிறது. யார் அந்த ரவுடிகள் என்று கேட்க, பிளாஷ்பேக் ஓபன் ஆகிறது.
திருநெல்வேலியில் ஜெகபதிபாபு பெரிய தொழிலதிபாராக இருக்க அவர் பெயரில் ஒரு மருத்துவ கல்லூரி இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த கல்லூரியில்தான் கீர்த்தி சுரேஷ் படித்துக் கொண்டிருக்கிறார். கல்லூரியின் தரம் மட்டமாக இருப்பதை மத்திய அரசுக்கு தெரிவித்துவிடுகிறார்கள் மாணவர்கள் சிலர். அதன்பின் மத்திய அரசு குழு அந்த கல்லூரியில் இன்ஸ்பெக்‌ஷன் நடத்தி கல்லூரி உரிமையை ரத்து செய்ய முடிவெடுக்கிறது. இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழிக்கும் ஜெகபதிபாபு செய்யும் பல தவறுகளால் ஒரு மாணவியின் உயிர் பறிக்கப்படுகிறது. இதனை கண்டு அஞ்சாமல் ஜெகபதிபாபு மீது போலீஸில் புகார் கொடுக்கிறார்.
டேனியல் பாலாஜிதான் ஜெகபதிபாபுவுக்கு அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்கிறார். வழக்கு முடியும்வரை கீர்த்தி சுரேஷுக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று கோர்ட் உத்தரவிடுகிறது. ஆதாரங்களை சேகரிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் கீர்த்தி. இதையெல்லாம் விஜய்யின் கூறியதும் கீர்த்திக்கு உதவ அவரும் திருநெல்வேலிக்கு வருகிறார். ஜெகபதிபாபுவுக்கு எதிராக அவர் சேகரிக்கும் ஆதாரங்கள்தான் படத்தின் இரண்டாம் பாதி.
ஆக்‌ஷன், காமெடி, காதல் என அனைத்தையும் வரிசையாக சரிவர காட்டியுள்ளார் இயக்குனர் பரதன். இசை சந்தோஷ் நாராயணன் பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *