‘அஜித் 57’ கதை ஜேம்ஸ்பாண்ட் டைப்பில் உள்ளதாம் அனிருத் விளக்கம்?

379
தல அஜித் நடித்து வரும் ‘அஜித் 57’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. வெளிநாட்டு படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் அனேகமாக இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரிக்குள் முற்றிலும் முடிவடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், இந்த படம் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார். ‘கொலைவெறி’ பாடலுக்கு பின்னர் என்னுடைய கேரியரில் மறக்க முடியாத பாடல் ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ பாடல். ‘வேதாளம்’ படத்தின்போதும் சரி, இந்த படத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போதும் சரி, அஜித் ரொம்பவே என்கரேஜ் செய்வது உண்டு.
வேதாளம்’ படத்திற்கு பின்னர் எங்களிடம் ரசிகர்கள் அதிகளவு எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த படத்தின் இசை கண்டிப்பாக இருக்கும். இந்த முறை வேற ஒரு களத்தில் இருக்கின்றோம். அதாவது இந்த படம் ஒரு ஸ்டைலிஷான ஜேம்ஸ்பாண்ட் டைப்பில் இருப்பதால் அதற்கேற்றவாறு என்னுடைய இசை இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
அஜித்தை முதன்முதலில் ஜேம்ஸ்பாண்ட் டைப்பில் திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் ஒரு செம விருந்தாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *