ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஹரிஷ் உத்தமன்!

214

இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள பைரவா படத்தில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஹரிஷ் உத்தமன் பற்றி பார்க்கலாம்.

1) நடிகராக வரும் முன்பாக, இவர் முன்னணி விமானச் சேவை நிறுவனங்களில், சிப்பந்தியாகப் பணிபுரிந்துள்ளார்.

 2) தா என்ற படத்தில்தான் முதலில் ஹரிஷ் உத்தமன் நடித்தார். அதன்பின்னர் ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த கவுரவம் படத்தில், சிறந்த வில்லனாக நடித்து, அங்கீகாரம் பெற்றார்.

3) தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 20க்கும் அதிகமான குறும்படங்களில் ஹரிஷ் நடித்துள்ளார்.

4) இதன்பிறகே, அவருக்கு தனி ஒருவன், றெக்க போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது. அதில், சிறப்பாக நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

5) தொடரி, றெக்க படங்களில் வில்லனாக நடித்ததற்காக, சிறந்த வில்லன் நடிகர்கள் பட்டியலில், ஹரிஷ் இடம்பிடித்துள்ளார். தற்போது, பைரவா படத்திலும், கலக்கியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *