சசிகலாவுக்கு எதிர்ப்பு: ஜெயலலிதா நினைவிடத்தில் விஷம் குடித்த அதிமுக தொண்டர்!

350

சசிகலா நடராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக தொண்டர் ஒருவர் ஜெயலலிதா நினைவிடத்தில் விஷம் குடித்த சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா நடராஜன், அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றதற்கு, அக்கட்சி தொண்டர்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 100 பேர் இன்று தங்களது பதவியை கூட்டாக ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் பெண் ஒருவர் திடீரென விஷம் குடித்து, தற்கொலைக்கு முயன்றார். அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் உடல்நலம்பெற்றார்.

போலீஸ் விசாரணையில், அந்த பெண், காரனோடையை சேர்ந்த சுவாதி ஆனந்த் என்றும், அவர் சசிகலாவின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷம் குடித்தார் என்றும் தெரியவந்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *