நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தாவுக்கு வரும் ஜனவரி 29-ஆம் தேதி நிச்சயதார்த்தம்

254

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யாவுக்கு வரும் ஜனவரி 29-ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் பரவின.முதலில் இந்த செய்தியை மறுத்து வந்த அந்த ஜோடி ,பின்னர் அதனை ஒப்புக் கொண்டது.இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற உள்ளதாகவும்,நிச்சயதார்த்த தேதியை தனது தந்தை நாகார்ஜுனா அறிவிப்பார் எனவும் நாக சைதன்யா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் நாக சைதன்யாவின் தம்பியான அகில் அக்கினேனிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.இதனை தொடர்ந்து நாக சைதன்யா-சமந்தா ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் எப்போது? என எதிர்பார்ப்பு தென்னிந்திய பட உலகில் எழத் துவங்கியுள்ளது.

இந்நிலையில் வரும் ஜனவரி 29-ஆம் தேதி நாக சைதன்யா -சமந்தாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.ஆனால் இந்த தகவலை அந்த ஜோடி ஒப்புக் கொள்ளவும் இல்லை,மறுக்கவும் இல்லை.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *