மோடியின் செயலால் அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

171

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார்.

அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் 26,000 பாஜ தொண்டர்கள் பங்கேற்றனர். இதனால், பெரிய மைதானத்தில் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்பாகவே, தொண்டர்கள் அனைவரும் அவரவர் மதிய உணவை எடுத்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. மதிய உணவு இடைவேளையின் போது, தொண்டர்கள் அவரவர் எடுத்து வந்த உணவை சாப்பிட தொடங்கிய போது, மைதானத்தின் மையப் பகுதியில் பிரதமர் மோடியும் தான்கொண்டு வந்த டிபன் பாக்சுடன் வந்து அமர்ந்தார்.

இதைப் பார்த்த கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் மோடி தனது உணவை பகிர்ந்து சாப்பிட்டார். அவரை ஆச்சர்யமாக பார்த்த கட்சி நிர்வாகிகளிடம், ‘இந்த கட்சியில் நானும் ஒரு தொண்டன்தானே’ என பதில் கூறி நெகிழ்ச்சிக்குள்ளாக்கினார் மோடி.

தொண்டர்கள் மத்தியில் அவர் உணவருந்தும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜ கட்சி, ‘இப்படிப்பட்ட சமத்துவம் பாஜ கட்சியில் மட்டுமே சாத்தியமாகும்’ என புகழ்பாடி கிட்டு இருக்காய்ங்க.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *