‘அந்த’ இடத்துல மட்டும் நயன்தாராவைவிட தமன்னா தான் ‘கெத்து’

0

பாலிவுட்டில் கிட்டத்தட்ட 23 வருடங்களாக திரைத்துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பூஜா எண்ட்டர்டேயின்மென்ட் நிறுவனம் முதல் முறையாக தென்னிந்தியாவில் அதுவும் முதல் படமாக தமிழில் படம் தயாரிக்க உள்ளார்கள். நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்த திகில் படத்திற்கு ‘கொலையுதிர் காலம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை சக்ரி டோலடி இயக்குகிறார். ஒரே நேரத்தில் தமிழ், ஹிந்தி என உருவாகும் இப்படத்தின் தமிழ் பதிப்பில் மட்டும்தான் நயன்தாரா ஹீரோயின். அப்போ ஹிந்தியில்…? வேறு யார் ‘தங்க இடுப்பழகி’ தமன்னாதான். காரணம் என்னதான் சவுத்ல நயன் பெரிய தாதாவா இருந்தாலும் பாம்பேவாலாக்களுக்கு தனது வெள்ளை இடுப்பால் தொல்லை கொடுப்பவர் தமன்னாதான்.

இத்தனைக்கும் அவர் நடித்த ஹிந்திப் படங்கள் பெரிதாகப் போகாவிட்டாலும் தமன்னா மேல் பாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு பைத்தியம் அதாங்க ‘க்ரேஸ்’ மட்டும் குறையவில்லை. (அது என்ன காரணமோ..?) இதனால்தான் ‘கொலையுதிர் காலம்’ ஹிந்தி பதிப்பில் தமன்னா பயமுறுத்த வருகிறார்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.