‘தனி ஒருவன்’ கூட்டணியை இயக்கும் மணிரத்னம்

0

சமீப காலமாக இயக்குனர்களின் படங்கள் ஓடாவிட்டால் வேறு வழியில்லாமல் தான் ஏற்கனவே இயக்கிய படங்களில் ஏதேனும் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார்கள். (ஒரு சேஃப்டிக்குத்தான்…?!). மணிரத்னமும் இப்படியொரு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைத்தான் கோடம்பாக்கமே ‘உச்’ கொட்டிப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

‘ராவணன்’, ‘கடல்’ படங்களின் தோல்வியால் ஹிட்டு குடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் கிட்டத்தட்ட ‘அலைபாயுதே’ இரண்டாம் பாகமாகவே, அதன் சாயலை ஒட்டி இயக்கிய ‘ஒரு காதல் கண்மணி’ ஹிட் லிஸ்டில் இடம் பெற்றது. சரி பரவாயில்லை. இனிமே தன்னோட கெத்த காட்டுற மாறி ஒரு புதுமையான கதைய  இயக்கப்போறாருனு நினைத்த ரசிகர்களின் வயிற்றில் புளியைக் கரைப்பதுபோல அமைந்தது ‘காற்று வெளியிடை’ படத்தின் ட்ரெயிலர். இப்படத்தின் ட்ரெயிலர் அப்படியே ‘ரோஜா’வை பிரதிபலித்தது. இருந்தாலும் படம் வரட்டும். பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வருவோம்.

இப்போதைய விஷயம் என்னவென்றால் மணிரத்னம் ‘காற்று வெளியிடை’ ரிலீஸிற்குப் பின் ஒரு நேரடித் தெலுங்கு படத்தை இயக்கப் போகிறார். அதில் ‘தனி ஒருவன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த ராம் சரண், அர்விந்த் சாமி இருவரையும் நடிக்கப் போகிறார்கள். ‘காற்று வெளியிடை’ படத்தின் ரிலீஸுக்குப் பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மணிரத்னமே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.