முருகதாஸ் விஜய் கூட்டணியின் ஹாட்ரிக் தீபாவளி விருந்து ரசிகர்கள் கொண்டாட்டம்

0

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படங்கள் பெரும்பாலும் தீபாவளி பண்டிகையை குறிவைத்தே ரிலீஸ் செய்யப்படும். மாபெரும் வெற்றியும் அடையும். ‘தீனா’ (2001 பொங்கல்), ‘கஜினி’ இந்த இரண்டு படங்களை தவிர, ‘ரமணா’, ‘ஏழாம் அறிவு’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என இந்த படங்கள் எல்லாமே தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட்டவைதான்.

2௦௦2ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸான ‘ரமணா’ அஜித்தின் ‘வில்லன்’, விஜய்யின் ‘பகவதி’ படங்களுடன் மோதி மாபெரும் வெற்றி பெற்றதோடு நம்பர் 1 இடத்தையும் பிடித்தது. 2௦11 ஆம் ஆண்டு வெளியான ‘ஏழாம் அறிவு’ படத்திற்கு வரலாறு காணாத ஓபனிங் கிடைத்தது. விஜய்யுடன் முதல் முதலாக இணைந்து முருகதாஸ் இயக்கிய ‘துப்பாக்கி’ அடுத்த ஆண்டு (2௦12) தீபாவளிக்கு ரிலீஸாகி, விஜய்யின் திரையுலக வரலாற்றிலேயே அதிக வசூல் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்றது. இதே பெருமை அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிற்கும் போய் சேர்ந்தது.

இரண்டு வருடங்கள் கழித்து இணைந்த அதே முருகதாஸ் விஜய் கூட்டணியில் வெளிவந்த ‘கத்தி’யும் தீபாவளி (2014) அன்றே ரிலீஸாகி வசூல் வேட்டை ஆடியது.

இந்நிலையில்தான் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாவது படத்தையும் ‘’2018 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ்’’ என்ற டார்கெட்டுடன்தான் பட வேலைகளை துவக்கி உள்ளாராம் முருகதாஸ். மகேஷ் பாபுவை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும்’ சம்பவாமி’ ஜூன் மாதம் ரிலீசானவுடன் அக்டோபர் மாதம் விஜய் படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கவுள்ளாராம் முருகதாஸ்.மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணியால் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாட்டமாக உள்ளனர்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.