‘கோ’ படத்திற்குப் பிறகு முக்கிய வேடத்தில் அஜ்மல் நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’

0


மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தில் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதன் மூலம் அனைவரது பாராட்டையும் ஒருங்கேப் பெற்றவர்தான் அஜ்மல். ஆனால் அதன்பிறகு அஜ்மல் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைய வாய்ப்புகள் எதுவும் அமையாமல் வீட்டில் கிடந்தார். 

இந்நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கோ’ படத்தில் சைலென்ட் வில்லனாக ரீ என்ட்ரி குடுத்து அசத்தினார். ஆனால் என்ன நடந்ததோ மீண்டும் அவருக்கு சரியான வகையில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார்.

தற்போது அருள்நிதி, மஹிமா நம்பியார் நடிப்பில் அறிமுக இயக்குனர் மாறன் இயக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ எனும் த்ரில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அஜ்மல் வேடத்திற்கு முதலில் ‘கிருமி’ கதிர் நடிப்பதாக இருந்து பிறகு அஜ்மல் தேர்வாகியுள்ளார்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.