பாகுபலி இரண்டாம் பாகம் ட்ரைலர்- விமர்சனம்

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர்.

இமாலய எதிர்பார்ப்பை தொடர்ந்து ரிலீஸுக்கு முன்பே இப்படத்தின் வியாபாரம் ரூ. 500 கோடியை தொட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த இப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர் இன்று வெளியானது.

இதில் பாகுபலி 2 எப்படி இருக்கும் என்பதற்கான அத்தனை விஷயங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. கண்ணை கவரும் விஷுவல்ஸ் மட்டுமல்லாது பின்னணி இசையும் சேர்த்து மெய்சிலிர்க்கும் அனுபவத்தை கொடுத்துள்ளது.

முதல் பாகத்தில் தமன்னாவின் டாப் லெஸ் பேசப்பட்டது போல் இதில் அனுஷ்கா – பிரபாஸின் லிப்லாக் பேசப்படும் என எதிர்பார்கலாம்.
மேலும் முதல் பாகத்தை மிஞ்சும் போர் காட்சி இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸில் இருக்கும் எனவும் உறுதியாக நம்பலாம்.

You might also like More from author