22 வயதில் நான் இப்படி இருந்தேனா என யோசிக்கிறேன்.எனக்கு பொறாமையாக இருக்கு.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடித்த துருவங்கள் 16 படத்தின் 75து நாள் விழா சென்னையில் நடந்தது. நடந்தவிழாவில் இயக்குனர் கவுதம் மேனன் கலந்துகொண்டார் மற்றும் பேசினார் அப்போது அவர் கூறுகையில், கையில் ஸ்கிரிப்டுகளுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். அதுவே எனக்கு பொறாமையாக இருக்கு.
சினிமா வந்து திறமைசாலிகளை வரவேற்கும். தமிழ் சினிமா வந்து கூரையை பிச்சுக்கிட்டு வரவேற்கும். அதை நான் பார்த்திருக்கிறேன். இதற்கு ஒரு பெரிய உதாரணம் கார்த்திக் நரேன் தான்.
ஒரு 21, 22 வயது நபர் எடுத்த படம் இவ்வளவு அருமையாக வந்ததை நான் பார்த்ததே இல்லை. நான் துருவங்கள் 16 படம் பார்க்கும் முன்பே கார்த்திக்கை சந்தித்தேன். அப்போது நான் உங்க ரசிகன் சார் என்றார் கார்த்திக். இந்த படத்தை பார்த்த பிறகு நான் அவர் ரசிகனாகிவிட்டேன்.
கார்த்திக் ரொம்ப தெளிவாக இருக்கிறார். 22 வயதில் நான் இப்படி இருந்தேனா என யோசிக்கிறேன். நம்ம பசங்க இப்படி இருப்பாங்களான்னு யோசிக்கிறேன்.
ரகுமான் சார் பாலசந்தர் சார் படத்தில் பார்த்தது போன்றே இன்னும் அப்படியே உள்ளார். அவருக்கு பிடித்தால் தான் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார் என நினைக்கிறேன். உலகத் தரம் வாய்ந்த படத்தை அளித்ததற்கு நாம் தான் கார்த்திக்கிற்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார் கவுதம் மேனன்.

You might also like More from author

%d bloggers like this: