நிசப்தம் – திரைவிமர்சனம் 

தமிழ் சினிமாவில் அத்திப்பூ பூப்பது போல தான் எப்பாவாது சிறந்த கதையம்சம் கொண்ட படம் வெளியாகும் அப்படி வெளியான படம் தான் நிசப்தம் நிச்சயமாக தமிழ் சினிமா நூற்றாண்டில் வந்த சிறந்த படங்கள் வரிசையில் இந்த படத்தையும் சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு சிறந்த படம் தான் இந்த படம் பெங்களூரில் நடந்த உண்மை சம்பத்தின் அடிப்படையில் உருவான திரைப்படம் தான் இந்த படம் 2014ம் ஆண்டு நடந்த பாலியல் கொலையை மையமாக வைத்து எடுக்க பட்ட காவியம் என்று தான் சொல்லணும் .

நிசப்தம் படத்தில் அஜய் ,அபிநயா,பேபி சந்தியா , ஹம்சா ,பழனி ,ருத்,கிஷோர் மற்றும் பலர் நடிப்பில் S,ஜ்.ஸ்டார் ஒளிப்பதிவில் ஷான் ஜாசேல் இசையில் அறிமுக இயக்குனர் மைக்கல் அருண் இயக்கத்தில் ஏஞ்சலின் டாவினிக் தயாரிப்பில் உருவான திரைப்படம் தான் நிசப்தம்

படம் முழுக்க முழுக்க பெங்களூரில் நடக்கும் கதை பெங்களூரில் கார் மெக்கானிக் ஆதி (அஜய்)அதே ஊரில் இருக்கும் அதிரா (அபிநயா) இருவரும் காதலித்து திருமணம் செய்கிறார்கள் ஆதி பணிபுரியும் கார் நிறுவனத்தின் மேனேஜர் பழனி அவரின் மனைவி அதிராவின் சிநேகதி ஆதி அதிராவுக்கு எட்டு வயதில் மகள் பூமி

அத்ரா தன் வீட்டை ஒட்டி ஒரு சின்ன டிபார்ட்மெண்ட் ஸ்டார் நடத்துகிறார் அவள் வீட்டையும் கடையும் பார்த்து கொண்டே தன் மகளையும் வளர்க்கிறாள் இதனால் பூமி அவளின் வேலையை அவளே பார்த்து கொள்வாள்.

ஒரு நாலா காலை பூமி எப்பவும் போல் பள்ளிக்கு கிளம்புவாள் நேரம் கொஞ்சம் அதிகமாக ஆகிவிடும் இதில் அம்மாவுக்கும் மகளுக்கும் சின்ன சண்டை அது மட்டும் இல்லாமல் ஒரே ஜோர் மழை அதிரா மழை பெய்கிறது நான் வந்து பள்ளியில் விடுகிறேன் என்று சொல்லுவாள் ஆனால் பூமி வேண்டாம் நான் போய்கொள்ளகிறேன் என்று போவாள் அப்போது பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு குடிகாரன் எட்டு வயது பூமியை பாலியல் பலத்காரம் பண்ணி அவளை சின்னாபின்னமாக ஆக்கி குற்றுயிரும் குலை உயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் பூமியின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மீட்டெடுப்பது பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது .

கொடூர பாலியல் கொடுமையால் சிறு குடல் பெருங்குடல் பாதிக்கப்பட்ட நிலையில், இனி வாழ்நாள் முழுதும்,அவளது ஜீரணமும் கழிவும் சிறு நீராகப் பை போல வயிற்றுக்கு வெளியே நடக்கும் கொடிய நிலைக்குப் போகிறாள் பூமி

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஆதி தன் குழந்தையின் வைத்திய செலவுக்கு கஷ்டப்படும் பொது தானே நுண் வந்து உதவுகிறார். பழனி ஆனால் அதை ஆதி மறுக்கிறார் . ஆனால் பழனி உதவுகிறார். இதற்கிடையில் பூமியை பலாத்காரம் பண்ணிய வழக்கில் விசாரணையில் இறங்கிக் குற்ற்வாளியைக் கைது செய்கிறார் அசிஸ்டன்ட் கமிஷனர் பர்வேஸ் அஹமது (கிஷோர்)

இதற்கிடையில் இந்த விஷயம் பத்திரிக்கையாளர்களிடம் இருந்து மறைக்க ஆதி மற்றும் அதிரா தம்பதி ஒரு போராட்டம் இந்த போராட்டத்தில் தன் மகள் பூமியை தூக்கி கொண்டு ஓடிவந்த ஆதி அந்த நேரத்தில் ஓடும் போது அதிர்வில் பூமி உடலில் இருந்து மலம் கசிகிறது அதை துடைக்க முயற்சி செய்யும் ஆதியை பூமி தொடவிடாமல் துரத்துகிறாள் ஆண்கள் என்றாலே பயத்தில் நடுங்குகிறாள் பூமி இதனால் ஆதி மிகவும் நொடிந்து போகிறார். தன் உலகமே பூமி எண்டு வாழ்ந்து வந்த ஆதி இந்த நிலையை பார்த்து மிகவும் நொடிந்து போகிறார்.

பூமியின் உடல் நலம் ஓரளவு தேறிய நிலையில் அவருக்கு மன நல சிகிச்சை அளிக்க வருகிறார் ஒரு பெண் டாக்டர் (ருது) தன் மகளான சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில் , தற்கொலைக்கு முயன்று கால்களை இழந்து சக்கர நாற்காலியில் இயங்கியபடி இது போன்று பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு மன நல சிகிச்சை அளிப்பதை ஒரு தவமாக செய்கிறார் அந்த டாக்டர் ருது இதனால் பூமியின் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக சகஜநிலைக்கு கொண்டு வருகிறார் ருது.

வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு போகும் நிலையில் , குற்றவாளி அதிகமாகக் குடிப்பவன் என்பதைக் காரணம் காட்டி, அவனை மதுவில் இருந்து மீட்கும் சிகிச்சைக்குக் கொண்டு போக வைத்து, அதன் மூலம் குற்றவாளியைக் காப்பாற்ற முயல்கிறது அவனது தரப்பு.

இதனால் கோர்ட்க்கு பூமி வரமாட்டாள் என்று சொல்கிறார் ஆதி ஆனால் கிஷோர் பூமி வரவில்லை என்றால் அவன் தப்பித்து விடுவான் என்று சொல்ல ஆதிக்கு பூமி சொன்ன வார்த்தை மனதில் திரும்ப வர அவனை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சரி என்று சொல்ல பூமியும் வருகிறாள். பிறகு அவன் தண்டனை பெற்றானா இல்லையா என்பதை திரையில் பாருங்கள் .

படத்தில் நடித்த யாரை பெருமையாக பேசுவது என்று தெரியவில்லை எல்லோரும் அந்த அளவுக்கு மிக சிறப்பாக நடித்துள்ளனர். என்று சொல்வதை விட வாழ்ந்துள்ளனர். என்று சொன்னால் மிகையாகது.

பூமி அப்பாவாக நடிக்கும் ஆதி மிக சிறந்த நடிகர் ஒரு தந்தையாக எல்லா காட்சிகளிலும் மிக சிறப்பாக நடித்துள்ளார் . தன் குழந்தை தன்னையே வெறுக்கிராலே என்று அழும் காட்சிகளில் மிக சிறந்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

அம்மவாகவரும் அபிநயா இவர் ஏற்கனவே தன் நடிப்பு மூலம் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்தவர் இந்த படம் மூலம் மிக சிறந்தா அம்மாவாக நடித்துள்ளார்.

படத்தின் நாயகி நாயகன் எல்லாமே பூமியாக நடித்த சந்தியா தான் அவர்கள் பெற்றோர்களை முதலில் பாராட்டவேண்டும் இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க சமதித்தது மிக பெரிய விஷயம் இந்த பிஞ்சு வயதில் அந்த வலி கொடுமையை மிக நேர்த்தியாக இயக்குனர் சொல்லி கொடுத்ததை மிகவும் யதார்த்தமாக அற்புதமாக செய்துள்ளார் சந்தியா

அதே போல் நண்பனாக வரும் பழனி கிஷோர் டாக்டர் ருது எல்லோரும் அவர்கள் பங்கை மிக சிறப்பாக செய்துள்ளனர் .

படத்தின் இயக்குனர் சமீபத்தில் வந்த படங்களில் மிக சிறந்த இயக்குனர் என்று தான் சொல்லணும் காதலையும் கல்யாணத்தையும் ஒரு இரண்டு நிமிட காட்சியில் சொன்ன இந்த இயக்குனரை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை கதையமைப்பும் சரி திரைக்கதையும் எங்கும் ஒரு சிறு நெருடல் இல்லாமல் மிக சிறப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் மைகேல் அருண்.இது காதல் படமா இல்லை ஒரு பெற்றோகளின் படமா என்று யோசிக்கும் நேரத்தில் பாலியல் கொடுமையை காண்பித்து மிக சிறந்த திரை கதை மூலம் நம்மை கவர்ந்து இல்லை உணர்ச்சி பூர்வமாக நெகிழவைத்த இயக்குனர் என்று தான் சொல்லணும்.இந்த இயக்குனரை படம் பார்த்து விட்டு வெளியில் வரும் போது அவரின் காலை தொட்டு கும்பிடவேனும் போல தோன்றியது ஏன் நான் செய்தேன்.

ஒரு நல்ல நண்பன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஷங்கர் கேரக்டர் மூலமும் , ஒரு நல்ல தோழி எப்படி இருக்க வேண்டும் என்பதை மெடில்டா கேரக்டர் மூலமும் அற்புதமாகச் சொல்கிறார்கள்.

இந்த படத்தை தயாரித்த பெண் தயாரிபாளரையும் இரு கரம் கூப்பி கும்பிடவேனும் ஏன் என்றால் இந்த மாதிரியான படங்கள் வர்த்தக ரீதியாக பெருசா ஒன்றும் கிடைக்காது இருந்து அவர் துணிந்து தயாரித்து இருப்பது பெருமையான விஷயம் ஆனால் இந்த படம் நிச்சயம் வர்த்தக ரீதியாகவும் பெரிய லாபத்தை தரும் ஏன் என்றால் படத்தின் இயக்குனர் அந்த அளவுக்கு மிக சிறப்பாக இயக்கு உள்ளார் எந்த இடத்திலும் கஞ்சம் கூட தொய்வு இல்லாமல் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்துக்கு மேலும் மிக பெரிய பலம் ஒளிப்பதிவு எஸ். ஜே.ஸ்டார் அற்புதமான ஒளிப்பதிவு காட்சிகள் வர்ணம் போல அமைத்துள்ளார்.

மொத்தத்தில் நிசப்தம் காவியம் Rank 4.5/5

You might also like More from author