“மொட்ட சிவா கெட்ட சிவா” – திரைவிமர்சனம் 

சென்னையில் நேர்மையான போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார் சத்யராஜ். அதேநேரத்தில் வனத்துறையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ், சென்னைக்கு மாற்றலாகி வருகிறார். சென்னையில் இவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையத்தில் கோவை சரளா, சதீஷ், சாம்ஸ் உள்ளிட்டோரும் பணிபுரிந்து வருகின்றனர்.

போலீஸ் வேலையில் கொஞ்சம்கூட நேர்மையில்லாமல், கொள்ளையடிப்பவர்களிடம் கமிஷன் வாங்குவதும், கொலை செய்பவர்களிடம் லஞ்சம் வாங்குவதுமாக இருந்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்நிலையில், ஒருநாள் டிவி ரிப்போர்ட்டராக வரும் நாயகி நிக்கி கல்ராணியை பார்த்ததும் காதல் வயப்பட்டு விடுகிறார். தனது தங்கையான நிக்கி கல்ராணிக்கு போலீஸ் அதிகாரியைத்தான் திருமணம் செய்துவைப்பேன் என்ற கொள்கையுடன் இருக்கும் தேவதர்ஷினியையும் சந்தித்து, தனது காதலுக்கு ஓகே வாங்குகிறார்.

இந்நிலையில், அரசியலில் மிகப்பெரிய புள்ளியான அசுதோஸ் ராணாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார் ராகவா லாரன்ஸ். அசுதோஸ் ராணா அரசியல் பின்புலத்தை வைத்துக்கொண்டு சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்து வருகிறார். இதற்கிடையில், தனது தம்பியான வம்சி கிருஷ்ணாவையும் அரசியலுக்குள் கொண்டுவர நினைக்கிறார்.

இந்நிலையில், ஒருநாள் வம்சி கிருஷ்ணா போதையில் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்கிறார். அதை பார்க்கும் வாய்பேச முடியாத ஒரு பெண், அந்த பெண்ணை காப்பாற்ற நினைக்கிறாள். ஆனால், வம்சி கிருஷ்ணாவோ ஐடி பெண்ணை விட்டுவிட்டு, வாய் பேசமுடியாத அந்த பெண்ணை கற்பழித்து கொன்று விடுகிறார்.

தனது அரசியல் பலத்தால் இந்த வழக்கிலிருந்து தனது தம்பியை வெளியே கொண்டுவரவேண்டும் என்று முயற்சி செய்கிறார் அசுதோஸ் ராணா. ஆனால், சத்யராஜோ அசுதோஸ் ராணாவை எப்படியாவது இந்த வழக்கில் சிக்கவைத்துவிட வேண்டும் நினைக்கிறார். அதற்கு, லாரன்சின் உதவியை நாட நினைக்கும் சத்யராஜுக்கு லாரன்ஸ் தன்னுடைய மகன் என்பது தெரிய வருகிறது.

சிறுவயதில், சத்யராஜ் பணியில் ஈடுபாடு காட்டியதன் விளைவால் தனது மனைவியை இழக்க நேரிடுகிறது. இதை அருகில் இருந்து பார்த்த ராகவா லாரன்ஸ் வீட்டை விட்டு வெளியேறி, காவல்துறை அதிகாரியாக உருவெடுத்து, தனது அப்பா பணியாற்றிவரும் காவல்துறையை களங்கப்படுத்த வேண்டும் என்ற நினைப்போடு வந்திருப்பது சத்யராஜுக்கு தெரிய வருகிறது.

எனவே, சத்யராஜ், உடனடியாக ராகவா லாரன்ஸை சந்தித்து, அன்று தனக்கு நேர்ந்த நிலைமையை புரிய வைக்கிறார். இதனால், சத்யராஜ் மீதிருந்த தவறான அபிப்ராயம் ராகவா லாரன்ஸ் மனதில் மறைய ஆரம்பிக்கிறது. அதன்பிறகு, இறந்த அந்த பெண்ணிற்கு நீதி தேடி புறப்படுகிறார்.

இறுதியில், அதற்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பதை ஆக்ஷன் கலந்து விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

இதுவரை பேய்களுக்கு பயந்த ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார். என்று தான் சொல்லணும் காதல் காமெடி அக்ஷன் செண்டிமெண்ட் என்று எல்லா வித நடிப்பையும் மிக சிறப்பாக செய்துள்ளார். என்று தான் சொல்லணும் முதல் பாதியில் எப்பவும் போல கோவைசரளா மற்றும் முதல் முறையாக சதேஷ்வுடன் சேர்ந்து காமெடியில் கலவென கலக்கிருகிறார்கள் இரண்டாம் பகுதியில் வில்லனுடன் சேர்ந்து சும்மா மாஸ் ஹீரோகளுக்கு சவால் விடும் அளவுக்கு பட்டையை கிளப்பி இருக்கிறார் என்று தான் சொல்லணும். வசனங்கள் சும்மா அனல் தெறிக்குது

முதல் முறையாக ராகவா லாரன்ஸ்வுடன் இணைந்து இருக்கும் நிக்கி கல்ராணி அழகு பதுமை நடிப்பை விட கவர்ச்சியில் கவனம் அதிகம் என்று தான் சொல்லணும் ரிபோர்ட்டராக வரும் நிக்கி கொஞ்சம் நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துங்க அதே போல நடனத்திலும் ராகவா லாரன்ஸ்வுடன் ஆடும்போது கொஞ்சம்குட பயிற்சி எடுத்து ஆடி இருக்கலாம். ஆனால் அவருக்கு இணையாக ஆடமுடியாது முயற்சிக்கு ஒரு சபாஷ் போடணும். ஆன பசங்களுக்கு ஒரே குஷி போங்க ஹ்ம்ம்

லாரன்ஸ் கோவை சரளா காமெடி சதீஷ் சாம்ஸ் காமெடி படத்துக்கு பிளஸ் என்று தான் சொல்லணும். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் சத்யராஜ் எப்போதும் போல நடிப்பில் நம்மை மிரள வைக்குறார். போலீஸ் வேடம் ஒன்னும் அவருக்கு புதுசு இல்லையே அருமையான நடிப்ல் நம்மை மிரட்சி கொடுத்துள்ளார் .

இயக்குனர் சாய் ரமணி முழுக்க முழுக்க ஒரு மாசால படம் என்று தான் சொல்லணும் மக்களுக்கு எல்லோர் பிரச்சனைகளை உரக்க சொல்லும் பத்திரிக்கையாளர்களை எப்பவும் போல கிண்டல் நக்கல் செய்துள்ளார் . போலீசையும் சேர்த்து நக்கல் செய்கிறேன்க என்ற பெயரில் காமெடியாக கொண்டு போய் இருக்கிறார். மற்றவர்களை கிண்டல் பண்ண முயன்ற இயக்குனர் இயக்கத்திலும் கொஞ்சம் கவனம் பண்ணியிருக்கலாம். இரண்டாம் பகுதியில் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக கொண்டு சென்றுள்ளதால் படம் கொன்சம் விறுவிறுப்படைகிறது. ராகவா லாரன்ஸுக்கு ஏற்றவாறு சண்டைக்காட்சிகளை அமைத்திருப்பது மேலும் சிறப்பு.

இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர் செம துள்ளல் இசை என்று தான் சொல்லணும் லாரன்ஸுக்கு ஏற்றவாறு இசை அமைத்துள்ளது மேலும் சிறப்பு இசைக்கு எற்ப நடனம் குறிப்பாக ஆடலுடன் பாடல் ரீமிக்ஸ் ‘ஹர ஹர மகாதேவி’ அரங்கத்தையே நடனம் ஆடவைக்கிறது. இந்த மாசால் படத்துக்கு எற்ப இசை பாராட்டுகள்.

அடுத்த பிளஸ் என்றால் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரியின் ஒளிப்பதிவில் பாடல்காட்சிகள் மட்டும் இல்லை சண்டை காட்சிகளும் அருமையான ஒலிப்பது என்று தான் சொல்லணும்

மொத்தத்தில் மொட்ட சிவா கெட்ட சிவா ரொம்ப நல்லவன் Rank 3/5

You might also like More from author

%d bloggers like this: